துப்பாக்கிச் சூடு : அண்டை நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!
அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் போர்ட் – ஓ – பிரின்ஸில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் ஹெய்டிக்கான விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
இந்தநிலையில், புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லோடர்டேலில் இருந்து குறித்த விமானம் புறப்பட்ட ஸ்பிரிட் எயார்லைன்ஸ் விமானம், அண்டை நாடான டொமினிகன் குடியரசிற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், வேறு எந்த பயணிகளும் காயமடையவில்லை.
மூன்று வாரங்களில் ஹெய்டியின் தலைநகருக்கு மேல் பறந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆயுதமேந்திய கும்பல்களாலும், அதிகரித்து வரும் வன்முறைகளாலும் நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்டி நாட்டில் புதிய பிரதமர் பதவியேற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
