துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறைஇ கெக்கனதுர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்த போது காரில் வந்த நபர் ஒருவரால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் லீசிங் கம்பனியொன்றில் “வாகனம் பறிமுதல் செய்பவராக” செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்