துசித ஹல்லோலுவவிற்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லோலுவவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.