துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜூன் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமையவே இவ்வாறு துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24