பிலிப்பைன்ஸின் பலாவான் மாகாணக் கடற்பகுதியில் தீப்பிடித்த எம்.வி. ஜூன் அஸ்டர்(MV June Aster) பயணிகள் படகில், தீ ஏற்பட்ட சுமார் 40 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்புப் படையினர் நுழைந்து தேடுதல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
மணிலாவிலிருந்து கொரோன்(Coron) நோக்கிச் சென்ற இந்தப் படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் உட்பட 134 பேர் இருந்தனர். தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 84 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ தொடர்ந்து எரிந்ததுடன், கடும் புகை, அதிக வெப்பம் மற்றும் வெடிப்பு ஏற்படும் அபாயம் காரணமாக மீட்புப் படையினரால் உடனடியாக படகுக்குள் செல்ல முடியவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.











