
தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
கம்பளை நகரில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருகையில்,
மில்லகஹமுல பிரதேசத்தில் இருந்து கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் கம்பளை நோக்கி பயணித்த போது அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு 50 மீற்றர் முன்னோக்கி சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றியுள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமானது.
மேலும், இந்த வீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
