தீகவாபி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் கையளிப்பு

உலக வங்கியின் நிதியுதவியில் PSSP திட்டத்தின் ஊடாக தீகவாபிய பிரதேச வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளர் மற்றும் சிகிச்சை பிரிவுகளைக்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடத்தினை பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தீகவாபிய பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்டிடத்தினை கையளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்