
திருமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை : எச்சரிக்கை
இலங்கையில் நேற்று புதன்கிழமை முதல் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் 8 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் இயல்பு நிலையை விட அதிகமாக வெப்பநிலை நிலவும் எனவும் பொதுமக்கள் தேவையற்ற விதமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும், அதிக நீரை பருகுமாறும், வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

