திருமண நாளன்று மணப்பெண் மீது காதலன் அசிட் தாக்குதல்
வெலிகம மதுரகொட பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமண நாளன்று அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று சனிக்கிழமை அதிகாலை 03 மணியளவில் வந்த நபர் ஒருவர் அசிட் வீசித் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த இளம்பெண் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது முன்னாள் காதலன் எனப்படும் இளைஞனே இவ்வாறு அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் குறித்த யுவதி வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய ஆண் ஒருவருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை முறித்துக் கொண்டார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்