திருமணமான 7 மாதங்களில் சடலமாக மீட்கப்பட்ட பெண்
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு – முள்ளியவளை, பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்து வந்த வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை வீட்டில் கிணற்றில் குறித்த குடும்ப பெண் விழுந்து இறந்துள்ளதாக முறைப்பாடு செய்வதற்காக கணவன் பொலிஸ் நிலையம் சென்றுள்ள நிலையில் பொலிஸ் வரமுன்னர் அயலவர்கள் கிணற்றில் வீழ்ந்த பெண்ணை மீட்டு உழவு இயந்திரத்தில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார், இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் இன்று செவ்வாய் கிழமை உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை குறித்த பொண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்