திருமஞ்சத்தில் எழுந்தருளினாள் நயினை நாகபூசணி அம்பாள்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 10ஆம் நாள் மாலைத்திருவிழா திருமஞ்சம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்த மண்டப பூஜை இடம்பெற்று உள் வீதி வலம் வந்து , பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் வெளி வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வலம் வந்து அருள்பாலித்தார்.

திருமஞ்சத்திருவிழா ஆரம்பித்து 25 ஆவது ஆண்டு நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .பதினாறு நாட்கள் இடம்பெறும் இவ் உற்வத்தில் 09 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.