திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் எனப் பல வகையான பொருள்களைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பெருந்தொகைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தே நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்