திருடிச்சென்ற முச்சக்கர வண்டி : வசமாக சிக்கிய திருடன்

இரத்தினபுரி பகுதியில் திருட முயற்சித்த முச்சக்கர வண்டியை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தமது முச்சக்கரவண்டியை நிறுத்தி விட்டு வைத்தியசாலைக்கு சென்ற போது, சந்தேகநபர் திருடிச்செல்ல முற்பட்ட போது, முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதுடன், சந்தேகநபரும் அதில் சிக்குண்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்