திருடனை பிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் ஹட்டன் பொலிஸார்!

-நுவரெலியா நிருபர்-

ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைபாடுகளுக்கு அமைவாகவும் கடந்த 21 ஆம் திகதி ஹட்டன் நகரில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு கடைக்குச் சென்று பெறுமதி மிக்க சேலை ஒன்றினை திருடுவதற்கு முயற்சி செய்தபோது அங்கு தொழில் புரிந்த பெண்ணால் அது முறியடிக்கப்பட்டது

அத்துடன் அங்கிருந்து அவர் தப்பித்துச் சென்றுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பிலும் கடையின் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கடையில் நுழைந்து திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது,

இதனால் குறித்த நபரை தொடர்பில் தகவல் தெரிந்தோர் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது