
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மிகச்சிறப்பான முறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
விசேட பூசைகள் இடம்பெற்று அதன்பின் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் சூழ ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தீர்த்தமாடினபர்.
திருக்கோவில் சேவற்கொடியோன் அமைப்பு மற்றும் தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பினரால் சிறப்பு சேவைகள் இடம்பெற்றது.
இவ் நிகழ்வு தொடக்கம் முதல் முடிவு வரை பொலிஸ் பொறுப்பதிகரிகள் மற்றும் தொண்டர் படை உறுப்பினர்கள் சிறப்பான சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
