
-திருக்கோவில் நிருபர்-
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றநிலையும் போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் குறித்த மாணவன் கலந்து கொண்டிருந்து ஓடி முடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாமையே மாணவனின் உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவித்தும், குறித்த மாணவனின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும் என தெரிவித்தும் பாடசாலை மாணவர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விதுர்ஷன் (17 வயது) என்ற மாணவனே இதன்போது உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
