திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்

-கிண்ணியா நிருபர்-

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வு நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் ஆரம்பமானதுடன், தமிழ்நாடு கோவிலூர் ஆதீனத்தின் 14ஆவது பட்டமாக விளங்கும் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிகர் சுவாமிகளின் சொற்பொழிவு இடம்பெற்றது.

இதேவேளை எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்