
திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் அன்னை பூபதி அம்மாவின் 36ஆவது நினைவு தினம்
-கிண்ணியா நிருபர்-
கணபதிப்பிள்ளை அன்னை பூபதி அம்மாவின் 36ஆவது நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்டத் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு நகரின் மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் முன்பாக மார்ச் 19 . 1988 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை 1988 ஏப்ரல் 19ல் உயிர் திறந்தார்.
இவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
