Last updated on November 8th, 2022 at 05:55 pm

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு விசேட பூஜை | Minnal 24 News %

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு விசேட பூஜை

-மன்னார் நிருபர்-

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை  ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 8.41 மணிக்கு விசேட ஆராதனைகள் நடை பெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை இடம்பெற்றன.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் அரசும் மக்களும் சிறக்க விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டதோடு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன் கைவிசேடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க