
திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை ரொட்டறி கழக 44 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் 08.05.2023 நடைபெற்றது. திரு. தேபன்ஜன் முகர்ஜி – லங்கா ஐ.ஓ.சியின் மூத்த துணைத் தலைவர், திருகோணமலை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
ரோட்டரி மாவட்ட செயலாளர் – PHF குமார் சுந்தரராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் திரு நா. கிட்னதாஸ் ரொட்டறி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார்.
திருகோணமலை ரோட்டரி கழக செயலாளர் PHF எஸ்.ஜெயசங்கர் இவ் வருடத்தின் கழக செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
திருகோணமலை ரொட்டறி கழகத்தின் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன், ரொட்டறி கழகத்தின் வரலாற்றையும், சர்வதேச நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.
திருகோணமலை ரொட்டறி கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நான்கு அங்கத்தவர்கள்கள் புதிய PHF அங்கத்தவர்களாக கௌரவிக்கப்பட்டார்கள்.
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசு பரீட்சையில் தி/ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறு பெற்ற செல்வி அனோஷிக்கா முரளிதரன் அவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தொழில்சார் சிறப்பு விருது Dr.R.R.S.J.பண்டார சுகாதார வைத்திய அதிகாரி ஈச்சிலம்பத்தை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
திரு. தேபன்ஜன் முகர்ஜி அவர்கள் தமது உரையில் லங்கா ஐ.ஓ.சி பற்றி ஒரு சுருக்கமான படத்தைக் கொடுத்ததுடன், ரொட்டறி திருகோணமலை சமூகத்திற்கான சிறந்த சேவையை பாராட்டினார்.
அடுத்த வருட தலைவர் PHF எஸ்.சௌந்தரராஜா நன்றி உரை நிகழ்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
