திருகோணமலை மாவட்ட வீதிகள் புனரமைப்புக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

திருகோணமலை மாவட்டத்தில் வீதிகளுக்கு புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 250 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன தெரிவித்தார்.

மாவட்டத்தில் வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களை இணைக்கும் வீதிகளை புனரமைத்தல், புதிய பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வான் எல பகுதியில் அமைந்துள்ள இரண்டாம் ஒழுங்கை கிராமத்துக்கு செல்லும் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார் .

ஒதுக்கப்படட நீதியானது திருகோணமலை மாவட்டம் முழுவதும் பல கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும், குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கிராமங்களில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு இந்த திட்டம் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.