திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் சாதித்துள்ள மாணவிகள்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் தனக்கு கற்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

எதிர்காலத்தில் பெண் நோயியல் வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும், தனக்கு கற்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.