திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் சுத்தம் தொடர்பான சிரமதானம்!
-திருகோணமலை நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளிற்கிணங்க இன்று சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல கடற்கரைகளையும் சுத்தப்படுத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக திருகோணமலை நகரசபையினால் மான் சரணாலயத்தின் கடற்கரை பகுதி திருகோணமலை நகரசபையின் சகல உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் சிரமதானம் இடம் பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்