-மூதூர் நிருபர்-
திருகோணமலை -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
அதிகளவான பக்த அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வில் ஈடுபட்டனர்.
பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமானது புனர்த்தானம் செய்யப்பட்டுள்ள நிலையில் , 5 வருடங்களுக்கு பின்னர் கும்பாபாஷேகமானது நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.