திருகோணமலை – கிளிநொச்சி அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டம்!

-கிண்ணியா நிருபர்-

இளம் தலைமுறைக்கு கால்பந்தாட்டத்தின் முக்கியத்துவத்தை ஊட்டும் நோக்கில், திருகோணமலை கால்பந்தாட்ட அணியினர், கிளிநொச்சி கால்பந்தாட்ட அணியுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி ஆரம்ப இந்துக் கல்லூரி மைதானத்தில் சிநேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் பங்கேற்ற வீரர்கள் நட்பும் ஒற்றுமையும் மிக்க விளையாட்டு நிகழ்வாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இளம் தலைமுறைக்கு விளையாட்டு மூலம் ஒற்றுமை மற்றும் ஆரோக்கிய வாழ்வை உருவாக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்தது.