திருகோணமலை-கிண்ணியா வலய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை -கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 263 மாணவ மாணவிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தல் எனும் திட்டத்தின்கீழ் தலா 7500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

மஸ்ஜித் அல் ஜன்னாஹ் அமைப்பானது முஸ்லீம் எயிட் நிறுவனத்தோடு இணைந்து இவ் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸுகர்கான் ,முஸ்லீம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.சீ. பைஸர்கான் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு பாடசாலைகளிள் அதிபர்கள், பெற்றோர்கள்,மாணவர்களும் இதில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.