
திருகோணமலையில் பட்டத் திருவிழா
-கிண்ணியா நிருபர்-
ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில் திருகோணமலை கடற்கரையில் பட்டத்திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன் போது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட மகளீர் சங்கங்கள் கலந்து சிறப்பித்தனர் .
மேலும் திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராசா (சுப்ரா) பிரதம விருந்தினராகவும் மாநகர சபை செயலாளர் திருவாளர் ஜெயவிஸ்ணு மற்றும் உப்பு வெளி பிரதேச சபை உறுப்பினர் கி.விஜித்தா அவர்களும் இவ் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கு.குமுதா கலந்து சிறப்பித்தனர்.
