திருகோணமலையில் இடம்பெற்ற 11ஆவது சர்வதேச யோகா தினம்

-கிண்ணியா நிருபர்-

ஓகம் கலைப்பள்ளி நிறுவனர் மற்றும் IUYF – Sri Lanka தலைவர் யோகாச்சார்யா குகதாஸ் ராம்கிஷன் தலைமையில், ஓகம் கலைப்பள்ளி மற்றும் சர்வதேச ஐக்கிய யோகாசன சம்மேளனம் – இலங்கை (IUYF Sri Lanka)  இணைந்து ஏற்பாடு செய்த 11ஆவது சர்வதேச யோகா தின விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை பொது கடற்கரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யோகாசன பயிற்சி, கடற்கரை சுத்தம் செய்யும் பணிகள், மற்றும் அனைவருக்கும் சத்துணவு வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

யோகா தினத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக நலத்தைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.