திமிங்கில வாந்தியுடன் மீனவர் கைது
பேருவளை, கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை கரையோரப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் 43 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட திமிங்கல அமரின் பெறுமதி சுமார் ஐம்பது கோடி ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்