திடீரென விபத்திற்குள்ளான விமானம்: இருவர் பலி
பிரேசிலின் சான்டா கேடரினா மாகாணத்தில் தனியார் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்திற்குள்ளான குறித்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டதுடன் தகவல் அறிந்ததும் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேடரினா பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்