திக்வா சூறாவளியால் 5,346 வீடுகள் முழுமையாக சேதம்

திக்வா சூறாவளியால் முழுமையாக 5,346
வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .

இன்று காலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை பகுதியளவில் 86,245 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த 85,351 பேர் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது .