தாய்வானில் நிலநடுக்கம்
தாய்வானின் ஹுலியன் மாகாண கடற்பகுதியில் 5.8 ரிச்டர் அளவில் இன்று வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 3.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்