
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வானின் கிழக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் தலைநகர் தைபேயிலும் உணரப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
