தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு மோசடி

தாய்லாந்தில் மோசடி வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனை

அழைப்பு மைய மோசடிகள் மற்றும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தாய்லாந்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) வேலை வாய்ப்பு தருவதாக இலங்கைப் பிரஜைகள் மோசடிக்குள்ளாக்கப்படுவதை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் கண்டறிந்துள்ளது.

இவ்வாறு அழைத்து செல்லப்படும் இலங்கையர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்தில் இருந்து பெரும்பாலும் மியான்மாருக்கு எல்லை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பணிபுரிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.  அவர்களில் சிலர் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இந்த அனைத்து இலங்கையர்களும் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர், அதன் பின் வேலை விசாவாக மாற்றுவதாக உறுதியளிக்கப்படுகின்றது,  எனினும் அவர்களுக்கு வேலை விசா வழங்கப்படுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே,  இலங்கைப் பிரஜைகள் இதுபோன்ற மோசடியான வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் எந்தவொரு வேலை வாய்ப்பையும் எடுப்பதற்கு முன் தீவிர எச்சரிக்கையுடன் ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் எந்தவொரு நிறுவனத்தின் பின்னணியையும் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இது போன்ற வேலை வாய்ப்பு தேடல்களின் போது தாய்லாந்து குடிவரவு பணியகத்தின் இணையதளத்தில் இருந்து தாய்லாந்து விசா விவரங்களைப் பெறுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

Website :     https://www.immigration.go.th/