தாந்தாமலை கோயிலுக்கு செல்ல பெற்றோர் மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது சிறுவன்!

தாந்தாமலை கோயிலுக்கு செல்ல பெற்றோர் சம்மதிக்கவில்லை என, 12 வயது சிறுவன் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம், மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்;கேணி பிரதேசத்தில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக, வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதன் நிஷாந் (வயது 12) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணியளவில், தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில், அதற்கு பெற்றோர், நாளை சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துக்கு செல்லலாம் என தெரிவித்த நிலையில், மனமுடைந்த சிறுவன் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.