தவறான முடிவு எடுத்து ரயில் முன் பாய்ந்த ஆசிரியை

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து நேற்று புதன் கிழமை  பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரான மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் (வயது – 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.