
தவறான உறவு காரணமாக பெண்ணுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் தவறான உறவு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாதேவல, வந்துரம்ப பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து விழுந்து கிடப்பதாக 119 தகவல் மையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பொலிஸாரின் விசாரணையில், உயிரிழந்த நபருடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேக நபரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், பின்னர் அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வந்துரம்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
