
தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் பொங்கல் திருவிழா
-மன்னார் நிருபர்-
தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலைமன்னார் மக்களுக்கு இன்று காலைத் அருட்பணி மாக்கஸ் அடிகளார் திருப்பலி ஒப்பு கொடுத்ததை தொடர்ந்து இளைஞர்கள் தாம் பொங்கிய பொங்கலை இறைவனுக்கு காணிக்கையாக்கினர். திருப்பலியின் நிறைவில் அனைத்து வலயங்களும் தமது வலய உறுப்பினர்களுக்கு பொங்கலை வழங்கி உண்டு மகிழ்ந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




