தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு நடைபவனியும், வீதி நாடகமும்

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் விழிப்புணர்வு நடைபவனி இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நடைபவணியானது மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து காந்தி பூங்கா வரை சென்றது.

இதனைத்தொடர்ந்து சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை மாணவர்களினால் விழிப்புணர்வு வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மையத்தின் உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.