கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்கொலையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்-

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் உள நலப்பிரிவின் ஏற்பாட்டில், தற்கொலை தடுப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.ஜீ.எம். ஜீராஜ், உள நல சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சராப்டீன், உளநல பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் அழகரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் இக் கருத்தரங்கு நடைபெற்றது.

தற்போது தற்கொலை எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு திரிபவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு வாழ்வதற்கான வழிமுறைகளை செயல்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குதலே இக் கருத்தரங்கின் நோக்கமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.