தற்காலிக போர்நிறுத்தத்திற்கு சூடானின் போராட்ட தரப்புக்கள் இணக்கம்

சூடானில் மோதலில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு ‘அவசர மனிதாபிமான வழக்குகள்’ பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுக்கு சூடான் ஆயுதப் படைகள் மற்றும் துணை இராணுவப் படைகளும் இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியில் பெரும்பாலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் தெரிவிக்கப்படுகின்றது.உலக உணவுத் திட்டத்தின் பணியாளர்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சூடானுக்கான பணிகளை உலக உணவுத்திட்டம் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்