தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட வீடு ஒன்றின் மலசலகூட குழியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா தருமபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.