தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகள் இணையவழி ஊடாக சமர்ப்பிக்கலாம்

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளின் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் கட்ட மேன்முறையீடுகளை 2026.01.12 முதல் 2026.01.25 வரை இணையவழி (Online) ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk இற்குச் சென்று (அதிகபட்சமாக) 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.

அத்துடன், http://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகவும் நேரடியாக மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.