
தரம் 1 மாணவர்களுக்கு தலா 1 லட்சம் வைப்பிலிட்ட சமூக ஆர்வலர்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட தி/நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன் பிரதீபனால் குறித்த பாடசாலைக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இதேவேளை 2023ஆம் ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்க்கும் நோக்கத்துடன் கல்விக்கான ஊக்குவிப்புத் தொகையாக 100000 ரூபா வழங்கப்பட்டு வருவதுடன் இவ் ஆண்டில் (2024) 7 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் மொத்தமாக ஏழு இலட்சம் வங்கி கணக்குகளில் பணம் ராஜகோபன் பிரதீபனால் இன்று வியாழக்கிழமை வைப்பிலிடப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


