தரமற்ற உரப் பொதிகளுடன் 11 பேர் கைது

பொலன்னறுவை, சிறிபுர நகரில் உள்ள தொழிலதிபருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 1566 தரமற்ற உரப் பொதிகளுடன், மேலாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரதேச புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தொழிலதிபர், தெஹியத்தகண்டிய, வெலிகந்த, அரலகங்வல, தியபெதும, கிங்குரக்கொட, சிறிபுர உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் தரமற்ற உரத்தை விநியோகித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரமற்ற மருந்துகள் 46 சதவீத நைட்ரஜன் கொண்டதாக பெயரிடப்பட்டு, விவசாயிகள் மற்றும் விற்பனை முகவர்களுக்கு அதிக விலைக்கு வழங்க தயாராக இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும், அவர் விநியோகித்த உரத்தைப் பயன்படுத்திய விவசாயிகளின் நெல் வயல்கள் முற்றிலுமாக மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகவும், மகசூல் குறைவதற்கு உரமே காரணமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.