தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஒருவரின் சகோதரனால் 12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்!
தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயர்களில் ஒருவரின் சகோதரனால் 12 வயதுச் சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, தம்புள்ளை பொலிஸின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், விசாரணைகளின் பின்னர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்