தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

 

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டின் கீழ் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி  வழிகாட்டுதளுக்கிணங்க இளவயது திருமணம் மற்றும் விவாகரத்து, போதைப் பொருள் பாவனை தொடர்பான பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை 95, முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கவும் குறைக்கவும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வு பக்க பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிகழ்வில், காதி நீதிபதி, தம்பலகாமம், பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் அஸ்வர், சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்சபாலன், முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் எம்.பி.எம்.பஸ்மி, தம்பலகாமம் பிரதேச ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மற்றும் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்