
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா, என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஈரோஸ் இயக்கத்தின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபா கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவனத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பொது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழெட்டு தமிழ் மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களோ அல்லது புலம்பெயர் தமிழர்களோ அல்லது டயஸ்போரா போன்ற தமிழ் அமைப்புகளோ உங்களிடம் கேட்டார்களா தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துங்கள் என்று.
ஒன்றுக்கும் உதவாத அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறீர்கள், அரியநேத்திரன் பாவம், அவர் ஒரு அப்பாவி, என தெரிவித்த ஈரோஸ் பிரபா, மேலும் அங்கு தெரிவிக்கையில் கீழ் கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
