தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமான விடயமில்லை

தேசியக் கட்சி ஒன்றின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுமதிமிக்க வாக்குகளாக மாற்ற முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – மாளிகைக்காடு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஒரு தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமான விடயமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்