
திருகோணமலையில் திருக்கோணேச்ச ஆலய விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
அப்பட்டமான விடயங்களை கூறி திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் தலையிட வேண்டாம், மக்கள் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளைகளை அமைக்கின்றனர், இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கும் கிழக்கு ஆளுனர் இவ் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
